Latest
காரில் போகும் போது ஆபாச சேட்டை; மசூதி பணியாளர் மீது 15 வயது பையன் புகார்

ஷா ஆலாம், அக்டோபர்-18,
சிலாங்கூர், ஷா ஆலாமில் மசூதி பணியாளரின் காரில் lift கேட்டு சென்ற போது, 15 வயது பையன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளான்.
இச்சம்பவம், கடந்த புதன்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தது.
புக்கிட் செந்தோசா பேருந்து நிலையத்திலிருந்து, நண்பரைப் பார்ப்பதற்காக 44 வயது சந்தேக நபரின் காரில் அவன் ஏறியுள்ளான்.
அப்போதுதான் அந்நபர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்; அதோடு அப்பையனின் கைப்பேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பினார்.
இதனால் அசௌகரியத்துக்கு ஆளான அப்பையன் போலீஸில் புகார் செய்தான்.
கைதான ஆடவர் விசாரணைக்காகத் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மசூதியில் கடந்தாண்டு டிசம்பரில் தற்காலிகமாக தங்கியது முதலே அப்பையனுக்கு சந்தேக நபர் பழக்கம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.