இங்கிலாந்து, செப்டம்பர் 2 – உலகப் புகழ்பெற்ற கால்பந்து கழகமான பார்ன்ஸ்லி (Barnsley) கழகத்தில் இணைந்து விளையாடும் வாய்ப்பை இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் பிறந்த 18 வயதான விமல் யோகநாதன் தனது திறமையாலும் அசைக்க முடியாத உறுதியாலும், இங்கிலாத்தில் விளையாடும் முதல் தமிழ் தொழில்முறை சார்ந்த கால்பந்து வீரராக உருவாகியுள்ளார்.
இதன் மூலம் ஆங்கில கால்பந்து தொடரில் இடம்பெற்ற முதல் தமிழ் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
விமலின் அசாதாரண திறமைகளை அங்கீகரித்த புகழ்பெற்ற லிவர்பூல் கால்பந்து கழகம், அவருக்கு 9 வயதாக இருந்தபோது தங்கள் இளைஞர் அகடமியில் சேர அழைப்பு விடுத்தது.
லிவர்பூலில் இருந்தபோது, விமலின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு அவரை ஒரு வலிமையான வீரராக மலர அனுமதித்தது.
இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த விமல், பல ஆண்டுகளாக பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஆதாரமாகவும் திகழ்கிறார்.