Latest

கிக் தொழிலாளர்களுக்கு புதிய உத்வேகம்: RM130 மில்லியன் மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் ரமணன்

சுங்கை பூலோ, மே-24,

நாட்டில் கிக் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உறுதிச் செய்வதற்காக, அரசாங்கம் பல்வேறு புதியத் திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

சிலாங்கூர், ​சுங்கை பூலோவில் நடைபெற்ற Rakan Grab அல்லது கிராப் பங்காளிகளின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.

​தொழிலாளர்களின் பொருளாதாரப் போட்டித்தன்மையை அதிகரிக்க 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய PACE திட்டமும், AI மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் திறன்களை வழங்க 110 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான AI MyMahir திட்டமும் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர, ​e-hailing ஓட்டுநர்கள் ADTEC மையங்கள் வழியாக தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறலாம் என்றும், வேலைவாய்ப்புகளுக்கு ‘MYFutureJobs’ தளத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் விவரித்தார்.

​மேலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், புகார்களைத் தெரிவிக்கவும் e-aduan இணையப் பக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிக் துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு அரசாங்கம், சேவை நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என ரமணன் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சுங்கை பூலோ வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1,000 e-hailing மற்றும் p-hailing ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!