Latestமலேசியா

கிளந்தானில் பயிற்சி மருத்துவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு

கிளந்தானில் பயிற்சி மருத்துவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு

குவாலா கிராய், பிப்ரவரி 11 –

26 வயதுடைய பயிற்சி மருத்துவர், பாலியல் தொந்தரவு மற்றும் தகாத படம் வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்றுஆஜரானார்.

குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட போது அவர் குற்றச்சாட்டுகளை நீதிபதியின் முன்னிலையில் மறுத்துள்ளார்.

குற்றப்பத்திரிகையின் படி, கடந்தாண்டு செப்டம்பர் Hospital Sultan Ismail Petra மருத்துவமனையின் குளியலறையில், ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தபோது கேமராவில் பதிவு செய்து அப்பெண்ணை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நீதிமன்றம் இரு குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தம் 6,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கி, பாதிக்கப்பட்டவரை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை 17 மார்ச் நடைபெற உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!