குவாலா கிராய், டிசம்பர்-16 – கிளந்தான், குவாலா கிராயில் காரோடு ஆற்றில் விழுந்தவர் பொது மக்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டார்.
நேற்று மாலை 6 மணிக்கு மேல் சுங்கை டுரியான் ஆற்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதன் போது கோத்தா பாருவிலிருந்து குவாலா கிராய் நோக்கி 28 ஆடவர் ஓட்டிச் சென்ற Proton Exora கார், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு ஆற்றில் விழுந்தது.
இதையடுத்து, தீயணைப்பு-மீட்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவர்கள் வருவதற்குள் அப்பகுதி மக்கள் அவ்வாடவரை காருக்குள்ளிருந்து வெளியே மீட்டனர்.
அவருக்குக் காயமேதும் ஏற்படவில்லை; இருந்த போதும் மேல் பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் பெத்ரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.