
கோலாலம்பூர், ஜூன்-5,
கோலாலம்பூர், டாங் வாங்கி LRT நிலையத்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில், பாதுகாப்பு முறை செயல்பட்டதன் காரணமாக கிளானா ஜெயா வழித்தட இரயில் ஒன்று திடீரென அவசரமாக நிறுத்தப்பட்டது.
இந்த திடீர் நிறுத்தத்தின்போது நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர் நிலைதடுமாறியதால், அவர் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் அருகில் இருந்த கண்ணாடித் தடுப்பில் பலமாக மோதியது.
இதில் அந்த கண்ணாடி உடைந்து சிதறியதில், அருகில் அமர்ந்திருந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
காயமடைந்த 5 பேரில் இருவர் மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்; மற்ற மூவருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இரயிலில் இருந்த பயணிகள் டாமாய் நிலையத்திற்கு மாற்றப்பட்டு தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இந்த விபத்து குறித்து Rapid KL நிறுவனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.



