
ஷா ஆலாம், ஜூலை-20-சிலாங்கூர், கிள்ளானில் Taman Sri Andalas பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் வீட்டின் கூரையின் மீதிருந்து மீட்கப்பட்டார்.
அச்சம்பவம் குறித்து அப்பகுதியிலுள்ள இரண்டு மாடி வரிசை வீட்டின் உரிமையாளரிடமிருந்து தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்றடைந்த போது வீட்டின் கூரையின் மீது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருப்பதைத் தனது வீரர்கள் கண்டறிந்ததாக Ashrul Riezal கூறினார்.
தீயணைப்புப் படையினர் பேச்சு வார்த்தையின் மூலம் சமாதானப்படுத்தி அந்நபரைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கிக் கொண்டு வந்தனர். அவர் பின்னர் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறை மற்றும் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாக Ashrul Riezal மேலும் குறிப்பிட்டார்.
அந்த நபர் ஆடைகள் ஏதுமின்றி காணப்பட்டதாகவும் அவர் வீடு புகுந்து திருடுபவராக இருக்கலாம் எனவும் கூறி காணொளி ஒன்று முன்னதாக சமூக ஊடகங்களில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.



