
கிள்ளான், ஜூலை-29- கிள்ளானில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குக் காரணமான ஆடவரை, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
அச்சம்பவம் குறித்து அன்றிரவு பொது மக்களில் ஒருவர் புகாரளித்ததாக, தென் கிள்ளான் போலீஸ் துணைத் தலைவர் கமால் அரிஃபின் அமான் ஷா ( Kamal Ariffin Aman Shah) கூறினார்.
ஒரு வீட்டுக்கு வெளியே அவ்வாடவர் சில துப்பாக்கி வேட்டுக்களைக் கிளப்பியதற்கான காரணம் இன்னமும் விசாரணையில் உள்ளதாக அவர் சொன்னார்.
முன்னதாக கிள்ளான், Taman Sentosa Phase 19-ல் நிகழ்ந்த அத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில், மோட்டார் சைக்கிளில் 2 ஆடவர்கள் ஒரு வீட்டை கடந்துச் சென்று, பின்னர் u-turn போட்டு திரும்பி வருவதையும், அவர்களில் ஒருவன் அதே வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூட்டை கிளப்புவதையும் காண முடிந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் அங்கிருந்து தப்பினர். அச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.