
கூச்சிங் , டிச 6 – கூச்சிங்கில் Jalan Matang , 8 ஆவது மைலில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10,000த்திற்கும் மேற்பட்ட கோழிகள் மாண்டன. தீயை அணைப்பதற்கான நீர்க் குழாய்கள் இல்லாதது மற்றும் அருகேயுள்ள இடத்தில் நீர் வசதி இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று நீரை எடுத்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இன்று அதிகாலை மணி 3.58க்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அதிகாலை மணி 4.42 அளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப் பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.