Latestமலேசியா

கிள்ளான் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி; அன்னதானம் வழங்கிய MIG

கிள்ளான், மே-2,

போர்ட் கிள்ளான், ஜாலான் லிம்போங்கான் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், இவ்வாண்டுக்கான சித்ரா பௌர்ணமி விழா ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில், சிலாங்கூர் மலேசிய நெறிமுறைத் தலைமுறை அல்லது MIG எனும் அரசு சாரா அமைப்பு ஏற்பாட்டில், ஏப்ரல் 30-ஆம் தேதி இரவு 7 மணி முதல் நேற்று மதியம் வரை பக்தர்களுக்குத் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது.

3 ஆண்டுகளாக இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக, MIG தலைவர் மோகு ரஜினி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

பல்லின மக்களை அங்கத்தினர்களாக கொண்ட இந்த MIG, சிலாங்கூர் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இத்தகைய அன்னதான நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இந்துக்களின் விழாக்கள் மட்டுமின்றி சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாளின் போதும் தங்களின் நடவடிக்கைத் தொடருவதாக அவர் சொன்னார்.

ஏற்கனவே சிறிய அளவில் ஆங்காங்கே நற்காரியங்களைச் செய்து வந்த இவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலிருந்து பெரிய அளவில் இயங்கி வருகின்றனர்.

சுமார் 280 உறுப்பினர்கள் பலத்துடன், பொது மக்களின் நன்கொடை போன்றவற்றில், அன்னதானம் உள்ளிட்ட நற்காரியங்களில் இந்த MIG அமைப்பு ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!