Latestமலேசியா

ஆகஸ்ட் 9 – மலேசிய சைவ சமயப் பேரவையின் கிள்ளானில் பிரம்மாண்ட ‘சைவ உணவுச் சந்தை 2026’

கிள்ளான், ஆகஸ்ட்-2 – சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை விரும்புகிறவரா நீங்கள்?

மலேசிய சைவ சமயப் பேரவையின் ஏற்பாட்டில் ‘சைவ உணவுச் சந்தை 2026’ வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கிள்ளான், தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

சைவ உணவின் சிறப்புகளையும், ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இங்குத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் முதல் இக்காலப் நவீன உணவுகள் வரை அனைத்தும் மிக ஆரோக்கியமான முறையில் தயார் செய்து விற்கப்படவுள்ளன.

இவ்விழாவில் இலவச சுகாதார முகாம், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், முனைவர் ஆறு நாகப்பன் முன்னெடுப்பில் கெர்லிங்கில் அமையவிருக்கும் மலேசியாவின் முதல் சைவ சமயக் கல்லூரி மற்றும் ஆலவாய் அண்ணல் சொக்கநாதர் திருக்கோயில் நிதித் திரட்டும் திட்டத்திற்கும் இந்த உணவுச் சந்தை பெரும் துணையாக அமைகிறது.

குடும்பத்தோடும் நண்பர்களோடும் திரளாக வருகை தந்து, நல்ல உணவைச் சுவைத்து இந்த உன்னத நோக்கத்திற்கு ஆதரவு தருமாறு பேரவை அன்போடு அழைக்கிறது.

தொடர்புக்கு:
மோகனா பரசுராமன் (012-547 9081)
சின்ன கண்ணன் (016-544 1242)

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!