
அமெரிக்கா, செப்டம்பர் 16 – அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இரு நண்பர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். 24 வயதான இந்தியர் ஒருவர் மற்றும் அமெரிக்கா-நேபாளத்தைச் சேர்ந்த மற்றொருவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் தண்டவாளத்தில் இருந்தபோது, தெற்கு நோக்கிச் சென்ற ரயில் அவர்கள் மீது மோதியது.
பொதுமக்கள் வெளியிட்ட காணொளியில், இருவரும் அமைதியாகவும் கேலி செய்து பேசிக்கொண்டிருந்ததும் பதிவாகியுள்ளது. ரயில் ஓட்டுநர் அவசர பிரேக்கை இயக்க முயன்ற போதிலும், ரயிலை உரிய நேரத்தில் நிறுத்த முடியவில்லை. அந்நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுமார் 100 பயணிகள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இருவரும் ஆபத்தை உணராததற்கான காரணம் குறித்து, அவர்கள் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார்களா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



