
காஜாங், ஆகஸ்ட் 21 – குடிநுழைத்துறையினர் மேற்கொண்ட இரண்டு தனித்தனி அமலாக்க சோதனைகளில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வேலை செய்து வந்த 94 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை மேற்கொண்ட முதல் அதிரடி சோதனையில் 52 வெளிநாட்டினர் மற்றும் 71 உள்ளூர்வாசிகள் என மொத்தம் 123 பேர் பரிசோதிக்கப்பட்டனர் என்றும் அதில், 46 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர் என்றும் மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
மறுநாள் நடைபெற்ற மற்றொரு தனி சோதனையில், சிலாங்கூரின் பாலாகோங் மற்றும் பூச்சோங் பகுதிகளிலுள்ள தொழிற்சாலை மற்றும் அங்காடியில் 48 சட்டவிரோத குடியேறிகள் (PATI) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மியான்மார். இந்தோனேசியா, பங்களாதேஷ், நேப்பாள், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அனைவரும் விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைகளுக்காக மில்லினியம் பெரனாங் மற்றும் லெங்கெங் குடிநுழைவுத் தடுப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளனர்.
நடத்தப்பட்ட அச்சோதனையில் சிலர் தப்பிக்க முயன்ற போதும் அவர்களின் முயற்சி அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.
பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில், செல்லுபடியான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்திய முதலாளிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. க்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.