Latestமலேசியா

முறைகேடு எதுவும் இல்லை; HRD Corp மீதான கறையைப் போக்கிய MACC

கோலாலம்பூர், டிசம்பர்-9 HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாகத்தில் முறைகேடு எதுவும் நிகழவில்லை என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கண்டறிந்துள்ளது.

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற பொதுக் கணக்குத் தணிக்கைச் செயற்குழுவான PAC-யின் அறிக்கையில், அத்தகவல் இடம் பெற்றது.

அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்ற PAC விசாரணையின் போது, MACC விசாரணை அதிகாரி மொஹமட் ஃபுவாட் செடெட் (Mohd Fuad Sedet) அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

MACC சட்டத்தின் கீழ் HRD Corp மீது விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டதில், முறைகேடு எதுவும் நிகழவில்லை என உறுதியானதாக ஃபுவாட் கூறியுள்ளார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp-பின் நிர்வாகத்தில் பல்வேறு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடந்த ஜூலையில் தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயிற்சிகளுக்கான அனுமதி, முதலீடுகள் மற்றும் சொத்து வாங்குதலில் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் நிதி தவறாகக் கையாளப்பட்டிருப்பது அம்பலமானதாகக் கூறி அவ்வறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, MACC-யின் விசாரணைக்கு வழி விட்டு ஜூலையில் தற்காலிக விடுப்பில் சென்ற HRD Corp-பின் தலைமை செயலதிகாரி சாஹுல் ஹமீட் ஷாய்க் டாவூட்( Shahul Hameed Shaik Dawood), அண்மையில் தான் பணிக்குத் திரும்பினார்.

அவ்விவகாரம் குறித்து முன்னதாக கருத்துரைத்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மும் (Stevan Sim ), குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியே என கூறியிருந்தார்.

தவிர, HRD Corp-பின் நிர்வாகத்தினர் எவரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அதே சமயம், அமைச்சின் அறிக்கை MACC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டதானது, தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்ட விதிமீறல் புகார்களை ஆராய்வதற்கே…

மாறாக, அதை வைத்து, குறிப்பிட்ட நபர்கள் தவறிழைத்து விட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் ஸ்டீவன் விளக்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று PAC வெளியிட்டுள்ள அறிக்கை, HRD Corp மீதான களங்கத்தைப் போக்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!