Latestமலேசியா

குடிநுழைவு அதிகாரிகள் சோதனையில் 32 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர், ஏப் 10 – சௌக்கிட் மற்றும் செந்தூலில் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவணங்களைக் கொண்டிருக்காத 32 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

15 மற்றும் 45 வயதுடைய அவர்களில் பெரும்பாலோர் தங்கும் விடுதிகள், சலவை கடைகள், உணவு விநியோகிப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் ஸ்னுக்கர் நிலையங்களில் வேலை செய்து வந்ததாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் வான் முகமட் சவ்பி வான் யூசோப் ( Wan Mohammad Saupee Wan Yusoff ) தெரிவித்தார்.

சௌக்கிட் பகுதியில் முன்னாள் ஹோட்டலாக இருந்து தற்போது வாடகை அறைகளாக விடப்பட்ட இடத்தில் 22 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு ஆடவர்கள், இரு இந்தோனேசிய ஆவர்கள், 9 இந்தோனேசிய பெண்கள், வங்காளதேசத்தைச் சேர்ந்த ஜந்து ஆடவர்கள் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் அடங்குவர்.

செந்தூலில் கடை வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒரு பாகிஸ்தான் ஆடவர், மூன்று இந்திய பிரஜைகள், இரு நேப்பாளியர்கள் மற்றும் மூன்று இந்தோனேசிய பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

குடிநுழைவு சட்டங்களை மீறி மலேசியாவில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்தது மற்றும் சட்டப்பூர்வ பயண ஆவணங்கள் இன்றி இருந்ததால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக வான் முகமட் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!