
கோலாலாம்பூர், ஜனவரி-7,
கடந்த 5 ஆண்டுகளில் 61,000 க்கும் அதிகமான மலேசியர்கள் தங்களது குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
அவர்களில் 93 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூருக்கு இடம்பெயருவதையே தேர்வு செய்துள்ளதாக, தேசியப் பதிவிலாகாவான JPN கூறியுள்ளது.
பொருளாதார வாய்ப்புகள் மற்றும் குடும்ப காரணங்களே இந்த முடிவுக்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ Badrul Hisham Alias தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேலை, நிலையான வருமானம் மற்றும் குடியுரிமை பெறும் சாத்தியம் மலேசியர்களை ஈர்த்து வருவதாக அவர் விளக்கினார்.
இதனிடையே, 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே அதிக அளவில் குடியுரிமை கைவிடும் தரப்பாக உள்ளனர்.
மலேசியா இரட்டை குடியுரிமையை அனுமதிக்காததால், வெளிநாட்டு குடியுரிமை பெறுவோர் தங்களது மலேசியக் குடியுரிமையை கைவிட வேண்டிய கட்டாயம் உள்ளது.



