
பெசூட், மார்ச்-9-வார இறுதி விடுமுறையில் பஹாங், கேமரன் மலைக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது காணாமல் போன 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி, திரங்கானு, பெசூட்டில் சாலையோர புதர்களில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் அவரது Yamaha R15 மோட்டார் சைக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டது.
பெற்றோரும் இதர 4 உடன்பிறப்புகளும் காரில் சென்ற வேளை, Ahmad Azreeq Zafreen Ahmad Azhar எனும் அவ்வாலிபர், மட்டும் மோட்டார் சைக்கிளில் பயணமானார்.
வெள்ளிக்கிழமை Beting Lintang Petron நிலையத்தில் அவர் கடைசியாக காணப்பட்டார்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிள் வழுக்கி அவர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வார இறுதி சுற்றுலா துயரத்தில் முடிந்திருப்பது குடும்பத்தாரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.



