Latestமலேசியா

கும்பல் தலைவனும் காதலிகளும் கைது: RM200 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்

கும்பல் தலைவனும் காதலிகளும் கைது: RM200 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், பிப்ரவரி-7,

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் நடைபெற்ற தொடர் சோதனைகளில் 3 முக்கிய போதைப்பொருள் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.

ஒரு கும்பல் தலைவனையும், அவனது இரு காதலிகள், மற்றும் மேலும் 9 பேரையும் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

ஜனவரி 30‑ஆம் தேதி கெந்திங் செம்பா R&R பகுதியில் 265 கிலோ மெத் உடன் மூவர் பிடிபட்டனர்.

அடுத்த நாள் கும்பல் தலைவனும் இரு பெண்களும் கைதுச் செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 2 மற்றும் 3‑ஆம் தேதிகளில் மேலும் 6 பேர் கைதாகினர்.

அவர்களில் KLIA‑வில் கஞ்சா கடத்த முயன்ற 2 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

சோதனைகளின் தொடர்ச்சியாக செராஸ், Taman Equine மற்றும் பினாங்கில் கூடுதலாக 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தமாக சுமார் 400 கிலோ _methamphetamine_ மற்றும் கஞ்சா வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மதிப்பு RM200 மில்லியன் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூர் மற்றும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!