
குளுவாங், மார்ச்-5,
ஜோகூர், குளுவாங்கில் பொது மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நடந்து சென்றதாகக் கூறப்படும் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஜாலான் மெங்கிபோலில் உள்ள ஒரு கிளினிக் அருகே நிகழ்ந்தது.
அந்நபர் நிர்வாணமாக நடந்து செல்லும் காட்சி பொது மக்களால் பதிவுச் செய்யப்பட்டு சமூக ஊடகங்களிலும் வைரலானது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி, சுமார் 50 வயது அவ்வாடவரை மாலை 4 மணியளவில் தாமான் Sunrise Park-கில் கைதுச் செய்தனர்.
தொடக்கக்கட்ட விசாரணையில், அந்நபருக்கு பழையக் குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், போதைப்பொருள் பயன்படுத்திய அறிகுறி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விசாரணை நடைபெறும் நிலையில், வைரலாகியுள்ள வீடியோவை மேலும் பகிர வேண்டாம் என்று பொது மக்களைப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



