குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு NSW மாநில நிதி அமைச்சர், எம்.பி.க்கள் சிறப்பு வருகை

ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெறும் 12 வது குளோபல் வர்த்தக மாநாடு டிசம்பர் 6 & 7 ஆம் தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிளாக்டவுன் லீஷர் சென்டர் ஸ்டான்ஹோப்பில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டிற்கு
• மாண்புமிகு திரு. டேனியல் மூக்கி, எம்.எல்.சி.
நியூ சவுத் வேல்ஸ் மாநில நிதியமைச்சர்
• மாண்புமிகு திரு. வாரன் கெர்பி, எம்.பி.
இந்திய நண்பர்கள் குழுவின் தலைவர், நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றம்
• மாண்புமிகு திரு. ஸ்டீபன் பாலி, எம்.பி.
பிளாக்டவுன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்,
நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்றம்
• மாண்புமிகு டாக்டர் ஹ்யூ மெக்டெர்மோட், எம்.பி.
நீதித்துறை அமைச்சருக்கான நாடாளுமன்றச் செயலாளர்,
நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்றம்
போன்ற NSW மாநில நிதி அமைச்சர், எம்பிக்கள் சிறப்பு வருகை புரிய உள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலியா தடையில்லா வர்த்தக உடன்படிக்கையின் படி நடைபெறும் இம்மாநாட்டில் இந்திய தமிழக அரசின் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் மானியம் பெறும் நிறுவனங்களும் அரங்கம் அமைக்க உள்ளன. இந்நிகழ்வின் மூலம் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணிகளை ஈட்டவும் தமிழக அரசின் திட்டமான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு NSW இரு மாநில அரசுகளின் தொழில்நுட்ப பரிமாற்றங்களும், மாநில உறவுகளை மேம்படுத்தும் விதமாக இம்மாநாடு அமைய உள்ளது..
இம்மாநாட்டில் சிட்னியில் உள்ள பல்வேறு தூதரகங்கள், பல்வேறு வர்த்தக சங்கங்கள் பங்கேற்க உள்ளன. இந்நிகழ்வில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தவும், B2B ஏற்படுத்தவும், தொழில் முறை கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெறும் என உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.
மேலும் இந்திய நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஆஸ்திரேலியா அரசு மானியங்களை வழங்குகிறது என செல்வக்குமார் தெரிவித்தார். தொடர்புக்கு +60166167708



