Latestமலேசியா

குவாந்தானில் கத்தி குத்து சம்பவம்; 38 வயதான ஆடவருக்கு வயிற்றில் காயம்

 

பஹாங், நவம்பர்- 3,

நேற்று, பஹாங் குவாந்தான், ஜலான் கம்பாங் கம்போங் ஸ்ரீ டாமாயில் (Kampung Sri Damai, Jalan Gambang), 38 வயதுடைய ஆடவர் ஒருவரின் வயிற்றில் குத்து காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவரை அவரின் வீட்டிலிருந்து வெளியே அழைத்த சந்தேக நபர் அவரை வெளியே அழைத்துச் செல்ல முயன்றிருக்கின்றார்.

ஆனால் அவர் அதை மறுத்தத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் திடீரென பின்புறம் வைத்திருந்த கத்தியை எடுத்து சம்பந்தப்பட்ட ஆடவரின் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சமா (Asisten Komisioner Ashari Abu Samah) தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அந்த ஆடவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதென்று போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நேற்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த வழக்கைப் போலீசார் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவம் தொடர்பான காணொளியில், கத்தி குத்து சம்பவத்திற்கு முன்பு இருவருக்கிடையேயான உரையாடல்களையும் மற்றும் தாக்குதல் நிகழ்வையும் தெளிவாக காண முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!