Latestமலேசியா

குவாந்தானில் சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன், வாகனம் மோதி உயிரிழப்பு

குவாந்தான், அக்டோபர் 28 –

நேற்று மாலை, Perumahan Rakyat Pak Mahat பகுதியிலிருக்கும் ‘சுராவ்’ அருகே சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன் ஒருவன் எம்பிவி (MPV) வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தான்.

சுல்ஃபான் அட்வா சுல்கிஃப்லி (Zulfan Adwa Zulkifli) என்ற அச்சிறுவனின் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் இன்று அதிகாலை சிகிச்சையின் போதே அவன் மருத்துவமனையில் உயிரிழந்தான் என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபூ சமா (Ashari Abu Samah) தெரிவித்தார்.

32 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆண் ஒருவர் ஓட்டிய எம்பிவி வாகனம் ஜாலான் தாஞ்சோங் லும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவர் இடது பக்கமாக திரும்புகையில் சாலையின் நடுப்பகுதியில் சைக்கிளில் சென்ற சிறுவனை மோதியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழும் அபாயகரமான அல்லது கவனக்குறைவான வாகன ஓட்ட சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!