Latestமலேசியா

கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கிற்கு ‘டத்தோ ஸ்ரீ’; மஇகாவின் சிவசுப்பிரமணியத்திற்கு ‘டத்தோ’ பட்டம்

ஆயர் கெரோ, ஆகஸ்ட் 24 — மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முகமட் அலி முகமட் ருஸ்தாமின் பிறந்தநாளையொட்டி, இன்று நடைபெற்ற சிறப்பு விருது வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாநில விருதுகள் மற்றும் பட்டங்களால் கௌரவிக்கப்பட்டனர்.

அதில், கல்வி அமைச்சர் Fadhlina Sidek, Darjah Gemilang Seri Melaka (DGSM) விருதைப் பெற்று ‘டத்தோ ஶ்ரீ’ பட்டத்தால் சிறப்பிக்கப்பட்டார்.

அதே விழாவில், மஇகா தேசிய அளவிலும் தமிழ் ஊடக வட்டாரத்திலும் நன்கு அறிமுகமான எல். சிவசுப்பிரமணியத்திற்கும் ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட்டது. தற்போது அவர் மஇகா தேசிய ஊடகப் பிரிவு செயலாளராகவும், கட்சியின் மத்திய செயலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

 

 

 

 

 

 

 

தமக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்த சிவசுப்பிரமணியம், இதற்குத் துணை நின்ற மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் உள்ளிட்ட கட்சித் தலைமைக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதனிடையே, மலாக்காவின் மெர்லிமாவ்வைச் சேர்ந்த பிரபல பாடகி Ziana Zain, Darjah Pangkuan Seri Melaka (DPSM) விருதைப் பெற்று ‘டத்தோ’ பட்டத்தால் கௌரவிக்கப்பட்டார்.

இவ்வாண்டு மொத்தம் 1,328 பேருக்கு மலாக்கா மாநிலத்தின் பல்வேறு விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!