Latestமலேசியா

குவாந்தான் Bukit Galing மலையேறும் போது மாரடைப்பு ஏற்பட்டு ஆடவர் மரணம்

குவாந்தான், செப்டம்பர்-2 – பஹாங், குவாந்தானில், ஜாலான் ஹஜி அமாட் அருகே Bukit Galing மலையேறும் போது, 32 வயது ஆடவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இன்று காலை 9 மணிக்கு நண்பர்கள் மூவருடன் இணைந்து அவர் மலையேறத் தொடங்கியுள்ளார்.

எனினும் காலை 11 மணி வாக்கில் மலை உச்சியை அடைந்த போது அந்நபர் மூச்சுத் திணறலுக்கு ஆளானார்.

இதனால் அலறிப் போன நண்பர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உதவிக் கோரினர்.

பிற்பகல் 1 மணியளவில் தீயணைப்பு மீட்புத் துறை வந்து சுவாச உதவிகளை வழங்கி, stretcher படுக்கை மூலம் அவரை மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தது.

கீழே வரும் வழியிலேயே தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியவர், சிறிது நேரத்திலேயே மூர்ச்சையானார்.

பாதை கரடு முரடாக இருந்ததால், மலையடிவாரம் வந்தடைய 3 மணி நேரங்கள் பிடித்திருக்கிறது.

கீழே வந்ததும் அவர் இறந்து போனது உறுதிச் செய்யப்பட்டு மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டது.

இன்னமும் திருமணம் ஆகாதவரான அவ்வாடவர், அடிக்கடி மலையேறி வருபவர் என்றும், அவருக்கு நோய்கள் எதுவும் இல்லையென்றும் குடும்பத்தார் கூறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!