
பத்து பஹாட் , டிச 30 – தனது நண்பரின் கழுத்தை துணியால் நெரித்து காயப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட புல்வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை, கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த தண்டனையை அனுபவிக்கும்படி குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஷபிக் இசுவான் ஜலாலுடினுக்கு (Mohd Shafik Izuan Jalaludin ) மாஜிஸ்திரேட்
நுரஷிடா ரஹ்மான் ( Nurasidah A.Rahman ) உத்தரவிட்டார்.
31 வயதுடைய முகமட் இசுவான் டிசம்பர் 21 ஆம் தேதி யோங் பெங்கிற்கு அருகேயுள்ள Sungai Guthrie Ladang Chaah விலுள்ள பாலத்தின் மீது அதிகாலை மணி 3.20 அளவில் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தனது 35 வயது நண்பர் ஒருவரை அவரது நெஞ்சில் குத்தியபின் அவரது கழுத்தில் துணியை சுற்றி இறுக்கியதாக முகமட் இசுவான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.



