
கோலாலம்பூர், மார்ச்-29-கெடா மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு இரண்டாம் கட்ட வெப்ப அலை தொடரும் என, மலேசியா வானிலை ஆராய்ச்சி துறையான MET Malaysia அறிவித்துள்ளது.
இந்நிலை, தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 பாகை செல்சியஸ் வரை 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் போது அறிவிக்கப்படுவதாகும்.
தற்போதைக்கு Kota Setar, Pokok Sena, Pendang மற்றும் Baling உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டாம் கட்ட வெப்ப அலையை எதிர்நோக்கியுள்ளன.
இது தவிர, கெடாவில் வேறு சில பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் சில பகுதிகள் முதல் கட்ட வெப்ப எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கெடாவில் Sik, Padang Terap, Kubang Pasu, Langkawi, Kuala Muda, Kulim & Bandar Baharu, பேராக்கில் Hulu Perak, Kinta, Kuala Kangsar மற்றும் பெர்லிஸ் முழுவதும் அவற்றிலடங்கும்.
அதிக வெப்பநிலை காரணமாக, சில பள்ளிகளில் வீட்டிலிருந்து கற்றல் – கற்பித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க பொது மக்கள் அதிக தண்ணீர் குடிக்கவும், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருக்காமல் தவிர்க்கவும் MET Malaysia அறிவுறுத்தியுள்ளது.



