Latestமலேசியா

கெந்திங் செம்பாவுக்கு அருகே கார் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்தது; ஆடவர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 9 – கெந்திங் செம்பாவிலிருந்து ( Genting Sempah)
கோம்பாக் நோக்கிச் செல்லும் ஜாலான் லாமா வழியாக, நேற்றிரவு கார் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 56 வயது ஆடவர் மரணம் அடைந்தார்.

இரவு மணி 10.46 க்கு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், இதனால் செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு சுமார் 28 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முகிலிஸ் மொக்தார் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

அவர் அதிகாலை மணி 1.15 க்கு விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி உறுதிப்படுத்தினர்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!