
கோலாலம்பூர் – ஆக 8 – கெந்திங் மலையில் இரண்டு வாகன ஓட்டிகளுக்கு இடையிலான சண்டையைக் காட்டும் டேஷ்கேம் வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து இது குறிது போலீஸ் விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவத்தில், ஒரு ஹோண்டா கார் ஒழுங்கற்ற முறையில் ஓட்டப்படுவதையும், சில சமயங்களில் இரண்டு பாதைகளைத் தடுப்பதையும், அதைத் தொடர்ந்து மஞ்சள் நிற புரோட்டான் சட்ரியா கார் செல்வதையும்
காணமுடிகிறது.
பின்னர் அந்தக் காட்சியில் டேஷ்கேம் உரிமையாளரின் கார் உட்பட மூன்று வாகனங்கள் சாலையோரமாக வருவதுடன் அதன் ஓட்டுநர்கள் கீழே இறங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து ஹோண்டா ஓட்டுநர் புரோட்டான் ஓட்டுநரை குத்துவதுடன் அங்கு மோதல் வெடிக்கிறது. சண்டைக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வீடியோவின் தலைப்பு “ஹோண்டா ஓட்டுநர் பிரச்சனையைத் தேடும் ஒரு கும்பல்” என்று குற்றம் சாட்டியதோடு காரின் எண் பட்டையையும் அந்த காணொளியில் காணமுடிந்தது. இந்த காணொளியை 50,000 க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதோடு , இந்த தகராறு தொடர்பில் போலீஸ் நடடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடக பயனர்கர்களில் பலர் வலியுறுத்தியுள்ளனர்.