
புத்ரா , நவ 14 – இன்று மதியம் கடுமையான மழை பெய்ததைத் தொடர்ந்து KLIA அனைத்துலக விமான நிலயத்தின் முதலாவது
முனையத்தில் பல இடங்களில் துவாரங்களினால் நீர் கசிவு ஏற்பட்டதை மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிஸ் பெர்ஹாட் உறுதிப்படுத்தியது.
நிலைமையை சமாளிப்பதற்கு பொறியியல் நடவடிக்கைக்காக பாதுகாப்பு குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதுடன் மின்சார முறையின் பாதுகாப்பு விவகாரங்களிலும் கவனம் செலுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டதாக Malaysia Airports Holdings Bhd வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நடவடிக்கையின்போது விளைவுகளை குறைப்பது குறித்தும் தனது பங்காளிகளுடன் அணுக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மலேசிய ஏர்போர்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக பயணிகள் புறப்படும் முனையத்தில் நீர் கசிவைக் காட்டும் 26 வினாடிகளைப் கொண்ட வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலானது.



