Latestமலேசியா

கே.எல்.சி.சி கலவரம்; புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட18 பேர் கைது

கோலாலம்பூர், மார்ச்-27-கே.எல்.சி.சி கலவரத்தில் புகைப்படக் கலைஞர்கள் என ஒப்புக்கொண்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.எல்.சி.சி-க்கு முன்பாக நடந்த கலவரம் மற்றும் இருவர் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அவர்கள் 17 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாவர்.

இரவு சுமார் 9 மணியளவில், தெருப் புகைப்படக் கலைஞர்கள் அல்லது ‘புகைப்படக் கலைஞர்கள்’ எனக் கூறப்படும் ஒரு குழுவினர் இந்திய சுற்றுலாப் பயணியான ஆடவர் ஒருவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது என டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சசலீ ஆடம்(Sazalee Adam ) தெரிவித்தார்.

சண்டையைத் தடுக்க முயன்ற உள்நாட்டவர் ஒருவர், கெராம்பிட் கத்தி என நம்பப்படும் ஆயுதத்தால் பின்னாலிருந்து தாக்கப்பட்டார். பின்னர், அவருடன் இருந்த சுமார் 30 சந்தேக நபர்களால் அவரும் தாக்கப்பட்டார்.

கே.எல்.சி.சி பகுதியில் தெருப் புகைப்படக் கலைஞர்களாகப் பணியாற்றியதை அவர்கள் ஒப்புக்கொண்டதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவர்களில் இருவர் தாக்குதலை நடத்தியவர்கள் என சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.

ஆயுதத்துடன் கலவரம் செய்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் 148 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் தலையில் காயம் அடைந்ததோடு அவருக்கு ஏழு தையல்கள் போடப்பட்ட வேளையில் மற்றொருவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!