கொலம்பிய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி விதித்த டிரம்ப்; பதிலடிக் கொடுத்த கொலம்பியா

வாஷிங்டன், ஜனவரி-27, கொலம்பியப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை 25 விழுக்காடாக உயர்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறி அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்காததால், அவ்வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் வரி விதிப்பு 50 விழுக்காடாக உயருமென்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே சமயம்
கொலம்பியா நாட்டு அதிகாரிகளுக்கான விசா ரத்து செய்யப்படுகிறது; கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை விதிக்கப்படுவதாகவும் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார்.
பதில் நடவடிக்கையாக கொலம்பியாவும், அமெரிக்க இறக்குமதி வரியை 25 விழுக்காடாக உயர்த்தியுள்ளார்.
‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற டிரம்பின் அதிரடிகளை அந்நாட்டு மக்கள் வரவேற்றாலும், அண்டை நாடுகளுடனான மோதல் உச்சமடைந்துள்ளது.