
வாஷிங்டன், ஏப்ரல்-28-கடந்த சனிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது அமெரிக்க மத்திய அதிகாரிகள் முறைப்படி குற்றம் சாட்டியுள்ளனர்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது Cole Tomas Allen, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைக் கொல்ல முயன்றது உள்ளிட்ட 3 முக்கியக் குற்றச்சாட்டுகளின் கீழ் திங்களன்று கூட்டரசு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தத் தாக்குதலை நடத்துவதற்காகவே கலிஃபோர்னியாவிலிருந்து Allen திட்டமிட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹோட்டலின் படிக்கட்டுகள் வழியாகப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் அவர் விருந்து அரங்கை நோக்கி ஓடியது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, Allen தனது குடும்பத்தினருக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.
அதில் தன்னை ஒரு ‘கூட்டரசு தோழமைக் கொலையாளி’ (Friendly Federal Assassin) என குறிப்பிட்டுள்ளதோடு, தனது அரசியல் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் போது அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் Allen-னுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது…



