Latestமலேசியா

கொள்கலன் கார் மீது விழுந்து விபத்து: தந்தை, மகள் பலி; டிரெய்லர் ஓட்டுநர் கைது

கோத்தா கினபாலு, அக்டோபர் 19 – சபா, செப்பாங்கார் (Sepanggar) துறைமுகம் அருகே கொள்கலன் கார் மீது விழுந்த விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 49 வயதுடைய டிரெய்லர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.15 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 53 வயதுடைய ஆடவரும் அவரது 24 வயது மகளும் பயணித்த டொயோட்டா அவான்சா கார் மீது கொள்கலன் விழுந்தது. இருவரும் காருக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

கொள்கலனை டிரெய்லரில் ஏற்றும்போது அது சமநிலையை இழந்து கார் மீது விழுந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. தீயணைப்புப் படையினர் கிரேன்களின் உதவியுடன் இரவு 9.55 மணியளவில் இருவரையும் மீட்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!