Latestமலேசியா

கொள்ளை முயற்சியின் போது தூங்கிக் கொண்டிருந்த டிரேய்லர் ஓட்டுநருக்கு காயம்

குவாலா சிலாங்கூர், மே-4 -குவாலா சிலாங்கூர், செக்கிஞ்சானில் முகமூடி அணிந்த இரு ஆடவர்கள் கொள்ளையிட முயன்றதில், தூங்கிக் கொண்டிருந்த டிரேய்லர் லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.

வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பாரிட் எம்பாட் எண்ணெய் நிலையமருகே இச்சம்பவம் நிகழ்ந்தது.

Hino இரக டிரேய்லரின் கண்ணாடிகளை உடைத்த கொள்ளையர்கள், ஓட்டுநருக்குச் சொந்தமான பொருட்களைத் திருட முயன்றனர்.

கண்ணாடிச் சிதறல்கள் பட்டு 54 வயது ஓட்டுநர் வலது கையிலும் இடது காலிலும் காயமுற்றார்.

இதனால் பதற்றமடைந்த கொள்ளையர்கள், பழுப்பு நிற Honda அல்லது Toyota Vios என நம்பப்படும் காரிலேறி தப்பிச் சென்றனர்.

காரின் பதிவு எண்ணை உறுதிப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில் கொள்ளை முயற்சி தொடர்பில் 2 சந்தேக நபர்களையும் குவாலா சிலாங்கூர் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!