
கோத்தா திங்கி, அக்டோபர்-6, கோத்தா திங்கி, பண்டார் பெனாவார் அருகே ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப் போட்டியில் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் மோசமாக உடையணிந்த சம்பவம் குறித்து, ஜோகூர் மந்திரி பெசார் கடும் அதிர்ச்சித் தெரிவித்துள்ளார்.
LGBT எனப்படும் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கை முறையை விளம்பரப் படுத்துவது போல் அமைந்த அந்நிகழ்வை தாம் கடுமையாகக் கருதுவதாக, டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) தெரிவித்தார்.
அது மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டிலோ அல்லது வேறேந்த அரசு நிறுவனங்களின் கீழோ மேற்கொள்ளப்பட்டதல்ல என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மாநில முஸ்லீம்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் நடத்தப்பட்ட அந்நிகழ்வை, போலீஸ் விசாரிக்க வேண்டுமென்றும் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கேட்டுக் கொண்டார்.
2024 PAN ஆசிய அனைத்துலக ஓட்டப் போட்டியின் பங்கேற்பாளர்கள் அறைகுறை ஆடையுடன் பங்கேற்ற படங்களும் வீடியோக்களும் முன்னதாக வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.