கோலாலம்பூர், ஜன 16 – இன்று காலையில் கோலாலம்பூர் ஜாலான் புடு, புக்கிட் பிந்தாங்கில் சுவிஸ் கார்டன் ஹோட்டலுக்கு அருகே மரம் ஒன்று விழுந்ததில் 39 வயது பெண்ணும் , 15 வயதுடைய இளம் பெண்ணும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக தீயணைப்பு படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று காலை மணி 10.44 அளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சாலையில் விழுந்து கிடந்த அந்த மரத்தை அகற்றும் நடவடிக்கையில் கோலாலம்பூர் மாநகர் மன்ற பணியாளர்களுடன் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஜாலான் புடுவில் இரு புறங்களிலும் போக்குவரத்து தடுக்கப்பட்டதால் ஜாலான் ஹங்துவா முதல் ஜாலான் டேவான் பகாசா டான் புஸ்தகா மற்றும் ஜாலான் மஹாராஜாலீலாவரை வாகன நெரிசல் ஏற்படும் என சாலையை பயன்படுத்துவோர் நம்புகின்றனர்.