
கோலாலம்பூர், அக்டோபர்- 8,
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் இன்று பிற்பகலில் மரம் விழுந்து பி.எம். டபள்யூ கார் நசுங்கியது. எனினும் அந்த காரின் ஓட்டுனர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பில் பிற்பகல் மணி 1.03அளவில் தீயணைப்பு மீட்புத்துறைக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக தீயணைப்புத்துறையின் மூத்த
அதிகாரி IM ஜெயமோகன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தித்திவங்சா தீயணைப்பு மற்றம் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எண்மருடன் ஒரு தீயணைப்பு வண்டியும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்றடைந்தபோது BMW கார் மீது மரம் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளுடன் போலீசாரும் சேர்ந்து கீழே விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவியதாக ஜெயமோகன் கூறினார்.