Latestமலேசியா

சன்வே சிட்டி கோவிலில் அவமதிப்பு; ஆடவருக்கு 8 மாத சிறை

ஈப்போ, மார்ச்-18-பேராக், ஈப்போவில் கோவில் மேடையை அவமதித்த 33 வயது ஆடவருக்கு நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சன்வே சிட்டியில் உள்ள கோவிலில், மார்ச் 13-ஆம் தேதி அவர் மேடையை சேதப்படுத்தியது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

கைதுச் செய்யப்பட்ட பிறகு, குற்றத்தை ஒப்புக்கொண்டதால், ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உடனடியாக அத்தண்டனையை வழங்கியது.

குற்றவாளி தனித்தே செயல்பட்டதாகக் கூறிய பேராக் போலீஸ், தேவையற்ற யூகங்களைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டது.

அனைத்து இன-மத நம்பிக்கைகளை மதித்து சமூகத்தில் ஒற்றுமையை காக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!