மங்களூரு, அக்டோபர்-6, தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் மங்களூருவில், ‘Israel Travels’ என பேருந்துக்கு பெயரிட்டிருந்த உரிமையாளருக்கு, சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்ததால், பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதுநாள் வரை எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது.
ஆனால், திடீரென அதுவும் ஈரான்-இஸ்ரேல் மோதல் வெடித்த நேரம் பார்த்து, அப்பேருந்தின் பெயர் யார் கண்ணிலோ பட்டு விட்டது.
சமூக ஊடகத்தில் அச்செய்தி வைரலாக, ‘இஸ்ரேல்’ பெயரைப் பயன்படுத்தியதற்காக உடனடியாக பேருந்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலைத்தளவாசிகள் போலீசை வலியுறுத்தினர்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக WhatsApp-பில் status வைத்தாலே FIR வழக்கு பதிவுச் செய்யும் போலீஸ், திறந்த வெளியில் பெரிய எழுத்துகளில் இஸ்ரேல் என்ற சொல்லை பயன்படுத்துவதை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதா என்பதே, வலைத்தளவாசிகளின் கேள்வியாகும்.
விஷயமறிந்த உரிமையாளர், எதற்கு வீண் பிரச்னை என்ற எண்ணத்தில் அவரே முன் வந்து இஸ்ரேலிலிருந்து ஜெருசலமாக பேருந்தின் பெயரை மாற்றி விட்டார்.
இருந்தாலும், போலீசே எதுவும் சொல்லவில்லை, வலைத்தளவாசிகளுக்கு என்ன வந்தது என, 12 ஆண்டுகள் இஸ்ரேலில் வேலை செய்தவரான அவர் விரக்தியில் கேட்கிறார்.