
சரவாக், செப்டம்பர் -23,
சரவாக் மீரியில் இருக்கும் தேசிய இளைஞர் திறன் நிலையத்தில் (IKBN) மாணவர் ஒருவரை சக மாணவர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு சம்பந்தப்பட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்படவோ அல்லது நிரந்தரமாக நீக்கப்படவோ வாய்ப்புகள் அதிகமுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் செப்டம்பர் 19ஆம் தேதி நிகழ்ததெனவும் IKBN நிர்வாகம் செப்டம்பர் 22ஆம் தேதியில்தான் புகாரைப் பெற்றதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யியோ தனது முகநூல் பக்கத்தில் ஒரு தாயாக, பகடிவதை கொடுமைகளை எப்போதும் ஏற்றுக்கொள்ள இயலாது என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே வேளை தனது அமைச்சு சம்பந்தப்பட்டவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.