Latestஉலகம்

சர்வதேச குழந்தை கடத்தல் கும்பல்; வெற்றிகரமாக கைது செய்த இந்தோனேசிய போலீஸ்

ஜகார்த்தா, ஜூலை 18 – கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் குறைந்தது 25 குழந்தைகளை சட்டவிரோதமாக விற்ற சர்வதேச குழந்தை கடத்தல் கும்பலை இந்தோனேசிய போலீசார் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.

இந்தோனேசிய போலீஸ் அதிகாரிகள் 13 பேரை கைது செய்ததாகவும், கடத்தலுக்கு கிட்டத்தட்ட பலியாகியிருந்த ஆறு குழந்தைகளை மீட்டனர் என்றும் அறியப்பட்டுள்ளது.

குழந்தைகளை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை குறிவைத்து அக்கும்பல் செயல்பட்டதாகவும் ‘புக்’ செய்யப்பட்ட குழந்தைகள் பிறந்தவுடனேயே, பிரசவ செலவுகள், இழப்பீட்டுத் தொகைகள் ஆகியவைகளை அக்கும்பல், குழந்தைகளின் அசல் பெற்றோர்களுக்கு வழங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அக்கும்பல் குழந்தைகளை 3,200 ரிங்கிட் முதல் 4,700 ரிங்கிட் வரை விற்றுள்ளது என்று உள்ளூர் போலீஸ் அறிவித்துள்ளது.

மேலும், சிங்கப்பூரிலிருக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்த தம்பதியினரைக் கண்டுபிடிப்பதே தங்களின் உடனடி பணி என்று இந்தோனேசிய காவல்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!