சித்தியவான், டிசம்பர்-15,பேராக், சித்தியவான், கம்போங் சித்தியவானில் உள்ள பள்ளிவாசலின் பின்புறமுள்ள புதரிலிருந்து, ஆண் சிசுவொன்று உயிரோடு மீட்கப்பட்டுளது.
நேற்று மாலை 6.45 மணியளவில் புதர் பகுதியிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு, பள்ளிவாசல் பணியாளர்கள் சென்று பார்த்த போது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் அந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
உடனடியாக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரகுமான் (Hasbullah Abd Rahman) கூறினார்.
குழந்தையின் பெற்றோரை அடையாளம் காணும் பணிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தகவல் தெரிந்த பொது மக்கள், மஞ்சோங் மாவட்ட போலீஸ் நிலையத்தைத் தொடர்புக்கொள்ளுமாறும் ஹஸ்புல்லா கேட்டுக் கொண்டார்.
அக்குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் முன்னதாக facebook-கில் வைரலானது.
“மிருகங்கள் கூட குட்டிகளை பாசமாகப் பார்க்கும்; ஆனால் இவர்களுக்கு எப்படித் தான் குழந்தையை புதரில் வீச மனம் வருகிறதோ?” என சம்பவத்தின் போது பள்ளிவாசலில் இருந்த Mohd Sobri Md Saad என்பவர் அந்த வைரல் பதிவில் கூறியிருந்தார்.