Latestமலேசியா

சிம்பாங் ரெங்காமில் வயதான பெண்ணிடம் கொள்ளையிட்ட முகமூடி அணிந்த ஆடவன்; வைரலான காணொளியால் பரபரப்பு

குளுவாங், ஆக 7- அதிகாலையில் ஒரு வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்திருந்த ஆடவன் உணவு உட்கொண்டிருந்த வயதான பெண்மணியிடம் கொள்ளையிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Simpang Renggam Kampung Melayuவில் நேற்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது.

நேற்று மாலை முதல் வைரலாகி வரும் ஒரு வீடியோவின் அடிப்படையில், அந்தப் பெண் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

1.30 வினாடிகள் மற்றும் 1.20 வினாடிகள் நீடிக்கும் இரண்டு வீடியோக்களில், அந்தப் பெண் கொள்ளையடிக்க வந்த நபரிடம் “நீ யார்?” என்று கேட்பதையும் , அதற்கு அலியின் நண்பர் என அந்த ஆடவன் பதில் தெரிவிப்பதையும் கேட்க முடிகிறது.

அலி என்று அந்த நபர் கூறியது அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர் என்று நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடைகளில் தேடும் நடவடிக்கையில் அந்த நபர் ஈடுபட்டபோது பலமுறை அவரை உட்காரும்படி உத்தரவிடுவதையும் பின்னர் அப்பெண்ணின் பணப்பையை அவரது படுக்கையில் கண்டெடுப்பதையும் அந்த காணொளியில் பார்க்கமுடிகிறது.

இந்த சம்பவத்தை Kluang மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Bahrin Mohd Noh உறுதிப்படுத்தியதோடு, இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!