சிரம்பான், செப்டம்பர் 20 – சிரம்பானில், இன்று காலையில், Proton Saga FLX ரக வாகனம் ஒன்று, சாலையின் நடுவிலிருந்த கல் தடுப்பில் மோதி, முழுவதும் தீக்கிரையானது.
முதற்கட்ட விசாரணையில், டிரெய்லர் லோரி ஒன்றிலிருந்து, கல் துடுப்பு விழுந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்திய மாது ஒருவர் அந்த கால் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானார்.
அதிர்ஷ்டவசமாக, அவர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில்; அவரின் வாகனம் 100 விழுக்காடு தீயில் எரிந்து சேதமானது.
தகவலறிந்து, ஜாலான் mambau சிரம்பான் 2-யில் நடந்த இச்சம்பவ இடத்திற்கு 12 பேர் அடங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சென்றனர்.