
சிரம்பான், அக்டோபர்-5,
சிரம்பானில் உள்ள தாமான் புக்கிட் கிரிஸ்டல் பகுதியில் வீட்டின் வேலி காங்கிரீட் தூண் சரிந்து மேலே விழுந்ததில், 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில் அப்பெண் குழந்தை தன் அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தை உடனடியாக துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், இரவு 9.14 மணிக்கு அது மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ரெம்பாவ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயமே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்தது.
இச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, வீடுகளின் கட்டட அமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்யுமாறு பொது மக்களுக்கு இவ்வேளையில் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.