
சிரம்பான், ஏப்ரல்-4- நெகிரி செம்பிலான், சிரம்பான், புக்கிட் தங்கா அருகேயுள்ள சாலையில் கருஞ்சிறுத்தைத் தாக்கி லாரி ஓட்டுநர் முகத்தில் படுகாயமடைந்தார்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் மற்றொரு வாகனத்தின் dash cam கேமராவில் பதிவாகி, 16 வினாடி வீடியோவாக வைரலாகியும் உள்ளது. அதில், லாரி சாலையோரம் நிற்பதும், கருஞ்சிறுத்தை ஆடவரைத் தாக்குவதும் தெரிகிறது.
வாகனங்கள் வருவது கண்டு சிறுத்தை சாலையின் குறுக்கே ஓடிவிட்டது. அடுத்து, அந்த லாரி ஓட்டுநர் விழுந்து கிடப்பதும், வீடியோவைப் பதிவுச் செய்த கார் லாரியின் முன்பக்கம் சென்று நிற்பதையும் காண முடிந்தது.
அவ்வாடவர், முகத்தில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காட்டும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன. அச்சம்பவம் குறித்து போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.