
சிரம்பான், டிசம்பர் 19-சிரம்பான், தாமான் பிங்கிரான் செனாவாங்கில் நேற்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், இரண்டு மாடி டேரஸ் வீட்டொன்றின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
சம்பவ நேரத்தில் குடும்பத்துடன் வீட்டில் இருந்ததாகவும், பலத்த சத்தம் கேட்டவுடனேயே அனைவரும் வெளியேறியதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
சற்று நேரத்தில் வீட்டின் முன்புற கட்டமைப்பு முழுமையாக இடிந்து விழுந்தது.
அதில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த குறைந்தது 3 வாகனங்கள் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.



