
சிரம்பான் – ஆகஸ்ட்-30 – சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபாரில் உள்ள பேருந்து நிலையத்தில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த வாரம் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பில், போலீஸார் 2 பாகிஸ்தானிய ஆடவர்களைக் கைதுச் செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறன்று அச்சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதை அவர்களில் ஒருவன் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக, சிரம்பான் போலீஸ் தலைவர் Mohamad Hatta Che Din கூறினார்.
2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 6 நாட்களுக்கு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முறையே 20, 30 வயதிலான இருவருக்கும் டிக் டோக் வாயிலாக அச்சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே சமூக ஊடகங்களில் பிள்ளைகளின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு பெற்றோர்களைப் போலீஸ் நினைவுறுத்தியது.