
சிரம்பான், செப்டம்பர் 3 – சிரம்பானில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை முத்தமிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆடவனுக்கு, நீதிமன்றம் இன்று ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று தாமான் துவாங்கு ஜாஃபர் பேருந்து நிறுத்தத்தில் இந்த அநாகரிகச் செயலை நிகழ்த்தியதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியை போலீசார் கைது செய்தபோது அவனின் கைப்பேசியில் அதே சிறுமியின் ஆபாசப் புகைப்படங்கள் இருந்த குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த ஆடவனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் டிக்டோக் பயன்பாட்டின் மூலம் பாதிக்கப்பட்ட அச்சிறுமியை அறிந்திருந்ததாகவும், பின்னர் அக்குற்றத்தைப் புரிந்ததாகவும் போலீஸ் தரப்பு விளக்கமளித்தது.