
சிரம்பான், ஜூலை-24- சிரம்பான்-லாபு டோல் சாவடி அருகே ஊர்வலமாகச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியான வேளை 11 பேர் காயமடைந்தனர்.
அதிகாலை 3 மணிக்கு அந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று உராய்சியதில் அவ்விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திலேயே மரணமடைந்த மூவரின் சடலங்கள் சவப்பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
விபத்து குறித்த விசாரணைத் தொடருவதாகக் கூறிய சிரம்பான் போலீஸ், மேல் விவரங்கள் அடங்கிய அறிக்கை விரைவில் வெளியிடப்படுமென்றது.